Wednesday, April 7, 2010
வானம் விழிக்கின்ற நேரம்..
வானம் விழிக்கின்ற நேரம்
வானம் விழிக்கின்ற நேரம்
எழுந்தருளாய் நாதனே..(2)
வானம் விழிக்கின்ற நேரம் எழுந்தருளாய் நாதனே..(வானம்)
காலை இளங்கதிர்கள் வந்து
வானில் விளக்கேற்றுதே..
வானில் விளக்கேற்றுதே.. (2)
பூஞ்சோலை மலர்களெல்லாம்
உனக்காக மலர்ந்ததே..
பள்ளி எழுச்சி பாடுகின்றோம்
ராமா ஸ்ரீ ராம ராம
ராமா ஸ்ரீ ராம ராம
எழுந்தருளாய் நாதனே..(வானம்)
Sunday, April 4, 2010
ராமா ராமா ராமா என்று நாமம்..
ராமா ராமா ராமா என்று நாமம் சொல்லி பாடனும்
நாமம் சொல்லி பாடனும்- நாவிலே
வராது போனால் நல்லவரோடு சேரனும்.
எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும்.
விட்டல், விட்டல், விட்டல் என்று கையைத் தட்டி பாடனும்
கையைத் தட்டி பாடனும்- கையை
தட்ட வராவிட்டால் கூட்டத்தோடு சேரனும்
எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும்.
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை செய்து பாடனும்
பஜனை செய்து பாடனும் - பஜனை
செய்ய வராவிட்டால் பக்தரோடு சேரனும்.
எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும். (ராமா)
Thursday, March 25, 2010
ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு..
ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம் - நல்ல
திவ்யமுகச் சந்திரனுக்கு சுப மங்களம்
மாராபி ராமனுக்கு மனு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு..(ஸ்ரீ ராம)
கொண்டல்மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலைக் குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீகத் தாளனுக்கு பூச்சக்ர வாளனுக்கு
தண்டுளவத் தோளனுக்கு ஜானகி மணாளனுக்கு..(ஸ்ரீ ராம)
Sunday, March 21, 2010
Sunday, March 14, 2010
ஜெகம் புகழும் புண்ய கதை..
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
உங்கள் செவிகுளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே..
இகபர சுகமெல்லாம் அடைந்திடலாமே
இந்த கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும்போதிலே (2)
இணையே இல்லாத காவியமாகும்..(ஜெகம் புகழும்)
அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கெளசல்யா, கைகேயி, சுமித்திரை
கருவினிலே உருவானார் ராமர், லஷ்மணர்
கனிவுள்ள பரதன், சத்ருக்னர் நால்வர்..
நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தாரே..
காட்டில் கெளசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலஷ்மணரை அனுப்பினனே..
தாடகை சுபாகுவை தரையில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே (2)
பாதையில் அகலிகை சாபத்தை தீர்த்தபின் (2)
சீர்பெறும் மிதிலை நகர் நாடி சென்றனரே..
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையை கன்னி மாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தனர்(2)
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்..
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தன்னை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வனின் வீரத்தை கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையை கண்டான்...(ஜெகம் புகழும்)
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணி முடி சூட்டவே நாள் குறித்தானே(2)
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகரத் தோரணத்தால் அலங்கரித்தனரே..
மந்தரை போதனையால் மனம்மாறி கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள் வாழவும்
மன்னனிடம் வரமதைக் கேட்டாள்..
அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உன்னை வனம் போக சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தை தந்தார் என்றாள்..
சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கி சென்றான்
மிஞ்சிய கோபத்தால் வெகுண்டே விலெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினார்..
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வதைக் கண்டு (2)
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடன் எனப் போவதென்று தடுத்தனர் சென்று..
ஆறுதல் கூறியே கார்முகில் வந்தான்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்னதற்காகவே
அன்னலும் கானகத்தை நாடிச் சென்றானே...(ஜெகம் புகழும்)
கங்கைக் கரைஅதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான் (2)
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்(2)
அஞ்சக வண்ணன் அங்கு சென்று தங்கினான் (2)
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள் (2)
கோபம் கொண்ட இளையோன்
குரும்பால் அவளை மானபங்கம் செய்து விரட்டி விட்டன்..
தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்..(2)
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச் சென்றான்..
வழியிலே ஜடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் ஹனுமனின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டி இலங்கை சென்ற ஹனுமான்
அன்னையை அசோக வனத்தில் கண்டான்..
"ராம சாமியின் தூதன் நானடா ராவணா" என்றான்
ஹனுமார் லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
"கண்டேன் அன்னையை" என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அய்யன் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்..
விபீஷணனின் நட்பைக் கொண்டான்
விபீஷணனின் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியை தீக்குளிக்க செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டார்(2)
மக்கள் பலரும் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்...(ஜெகம் புகழும்)
Friday, February 19, 2010
இமை மூடி வைத்தேன்
வரிகள் : புகழேந்தி
...............................
இமை மூடி வைத்தேன்..கண்ணில்
இருக்கும் நீ எங்கு போவாய்..
சுமை எனக்கில்லை சுவை அதில் உண்டு
சுந்தர நாமா ஸ்ரீ ராமா (இமை மூடி)
மனம் மனம் எனும் மாளிகையில் நீ
மன்னவனாக கொலுவிருப்பாய்
வனம் வனம் என அழைந்தது போதும்
வைதேகியுடன் வாழ்ந்திருப்பாய்
அங்கு இங்கு போவதென்றால் (2)
என் அனுமதி பெறவேண்டுமே..ராமா ராமா((இமை மூடி)
கடல் கடல் அது உன் உடல் நீலம்
கண்ணில் அதனை தேக்கி வைத்தேன்
உடல் உடல் எனும் உருவுக்குள்ளே
உனை உயிராய் உணர்வாய் ஆக்கிவைத்தேன்
என் செயலைக் கண்டு சிரிப்பாயோ (2)
நீ சிறைக் கைதி அல்லவோ..ராமா ராமா((இமை மூடி)
Thursday, February 18, 2010
புண்ணியம் செய்தவர்கள்...
வரிகள் : புகழேந்தி
...............................
புண்ணியம் செய்தவர்கள் நாங்களா இல்லை
பூமியை ஆளுகின்ற நீங்களா - என
புதிர் போட்டு கேட்கும் கேள்வி ஒன்று .. அதை
புரிந்து கொண்டால் அர்த்தம் பல உண்டு ( )
மூங்கில் சொன்னது ராம மூர்த்தியின் கை
வில்லாக வளைந்தேனென்று
பாறை சொன்னது அவன் பாதம்பட்டு
பாவையாக தெளிந்தேனென்று (2)
மண் சொன்னது திருமகளைத் தந்து
மருமகனாய் அடைந்தேனென்று (2)
இவையெல்லாம் கேட்கும் கேள்வி ஒன்று
என்ன சேவை செய்தீரென்று.. மனிதர்களே
என்ன சேவை செய்தீரென்று ( )
படகு சொன்னது அந்த பகவானை
கரை சேர்த்தது தாம் என்று
பாதுகை சொன்னது பதினான்காண்டு
அயோத்தியை ஆண்டோமென்று(2)
பறவை சொன்னது தர்ம பத்தினியை
சிறையெடுத்தது யாரென்று (2)
இவையெல்லாம் கேட்கும் கேள்வி ஒன்று
என்ன சேவை செய்தீரென்று.. மனிதர்களே
என்ன சேவை செய்தீரென்று ( )
பழங்கள் சொன்னது ராமன் பசியை ஆற்றி
பிறந்த பயனை அடைந்தோமென்று
குரங்கினங்கள் சொன்னது அசுர கோட்டையை
தூள்தூளாய் உடைத்தோமென்று (2)
அணில்கள் சொன்னது கடலில் அணையை கட்ட
மணலெடுத்து கொடுத்தோமென்று (2)
இவையெல்லாம் கேட்கும் கேள்வி ஒன்று
என்ன சேவை செய்தீரென்று.. மனிதர்களே
என்ன சேவை செய்தீரென்று ( )
Wednesday, February 17, 2010
என் பாடல் இதுவைய்ய ராமா..
வரிகள் : புகழேந்தி
...............................
என் பாடல் இதுவைய்ய ராமா - இதில்
எதுகையும் மோனையும் எதிர்பார்க்கலாமா
இதய தளத்திலே எழுந்த ஆசையில் (2)
இசைப்பதெல்லாம் சங்கீதமாகுமா (என் பாடல்)
கம்பன் எழுதிய கவிதை இதல்ல
ஸ்ரீ தியாகராயரின் கீர்த்தனை அல்ல
இயற்கை யாவும் என்னுள் இயங்கி
உயிராய் பிறந்து உருவாய் வளர்ந்த (என் பாடல்)
காரண காரியம் தெரியாதையா - புது
கவிதைகள் பண்புகள் புரியாதையா
சுருதிலய மேளங்கள் அறியேனைய்யா - உன்
சுந்தர நாமத்தின் நாதத்தில் தோன்றும் (என் பாடல்)
விழிகள் மூடி காணும் காட்சிகள்
மொழியில்லாமல் மொழியும் ஒசைகள்
தவழும் மழலை குழந்தையை போல
தாய் உன் மடியில் தளிராய் கிடக்கும் (என் பாடல்)
மானிலம் போற்றிடும் உன் சரிதை
வரிகள் : புகழேந்தி
...............................
மானிலம் போற்றிடும் உன் சரிதை - என்
மனதை விட்டகலாத புண்யகதை
மழையென பொழியுது தேனமுதை - உன்
மகிமையை பாடிடும் பூங்கவிதை
ராமா ராமா ( )
வித்தைகள் பயில்கின்ற வேளையில் மாமுனியின்
வேள்வியை காக்கவென விரைந்தாய் ராமா (2)
தாடகை வதம் செய்து அகலிகைக்கருள் புரிந்து
சிவனார் வில்லொடித்து சீதையின் சுயம்வரம்
புரிந்தவனே ராமா ராமா ( )
மணிமுடி சூட்டிட பெற்றவர் நினைத்தால்
மரவுரி தரித்திட சிற்றன்னை பணித்தார் (2)
மாதவம் உரிதென்று நீ வரித்தாய்.
பரதனை குறைகேட்டு பாதுகை அளித்து
பாரினை காத்தாய் ராமா ராமா ( )
மானாய் உருக்கொண்ட மாரீசனை கொன்று
வானர வீரர் தம்மை சோதரர் எனக்கொண்டு (2)
சேனையின் அணை கண்டு சீதையின் நிலைகண்டு
ராவணன் உயிர் கொண்ட ரவிகுலசோம அயோத்தியை
ஆண்ட ஸ்ரீ ராமா ராமா ( )
Subscribe to:
Posts (Atom)