
ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம் - நல்ல
திவ்யமுகச் சந்திரனுக்கு சுப மங்களம்
மாராபி ராமனுக்கு மனு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு..(ஸ்ரீ ராம)
கொண்டல்மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலைக் குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீகத் தாளனுக்கு பூச்சக்ர வாளனுக்கு
தண்டுளவத் தோளனுக்கு ஜானகி மணாளனுக்கு..(ஸ்ரீ ராம)
2 comments:
அருமையான பாடல். பகிர்தலுக்கு நன்றி. குழந்தை ராமர் கொள்ளை அழகு. பெரிய படமாக போட்டிருக்கலாமே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
முதலில் குழந்தை ராமர் படத்தை சிறிய படமாக போட்டோஷாப்பில் உபயோகிப்பதற்காக இணையத்திலிருந்து எடுத்திருந்தேன் .. பிறகு பாடலுக்காக தேடும்போது மீண்டும் கிடைக்கவில்லை..
Post a Comment