Friday, February 19, 2010

இமை மூடி வைத்தேன்


வரிகள் : புகழேந்தி
...............................
இமை மூடி வைத்தேன்..கண்ணில்
இருக்கும் நீ எங்கு போவாய்..
சுமை எனக்கில்லை சுவை அதில் உண்டு
சுந்தர நாமா ஸ்ரீ ராமா (இமை மூடி)

மனம் மனம் எனும் மாளிகையில் நீ
மன்னவனாக கொலுவிருப்பாய்
வனம் வனம் என அழைந்தது போதும்
வைதேகியுடன் வாழ்ந்திருப்பாய்
அங்கு இங்கு போவதென்றால் (2)
என் அனுமதி பெறவேண்டுமே..ராமா ராமா((இமை மூடி)

கடல் கடல் அது உன் உடல் நீலம்
கண்ணில் அதனை தேக்கி வைத்தேன்
உடல் உடல் எனும் உருவுக்குள்ளே
உனை உயிராய் உணர்வாய் ஆக்கிவைத்தேன்
என் செயலைக் கண்டு சிரிப்பாயோ (2)
நீ சிறைக் கைதி அல்லவோ..ராமா ராமா((இமை மூடி)

5 comments:

ramesh sadasivam said...

ஜெய் ஸ்ரீ ராம். கவிதைகளும் அனைத்தும் அருமை. பகிர்தலுக்கு நன்றி.

Thilaga. S said...

ஸ்ரீராமரின் உயர்ந்த பக்தரின்..வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி ..

sury siva said...

ஸ்ரீ ராமனருளால் தங்கள் வலைப்பதிவுக்கு வந்தேன் எனவே சொல்லவேண்டும்.
தங்கள் பக்திப்பாடல் நன்றாக உள்ளது. அனுமன் மார்பில் கொண்டான். நீங்கள்
தங்கள் இமையில் மூடி வைத்திருக்கிறீர்கள்
நானும் ராம பக்தன். ஒரு சாஸ்திரிய சங்கீத ரசிகன். அவ்வளவாக குரல் கிடையாது எனினும்
அவ்வப்போது வலைப்பதிவுகளில் கிடைக்கும் பல்வேறு பாடல்களை மெட்டமைத்து
யூ ட்யூபில் போடுவது முதியோனான எனது ஹாபி .
தங்கள் இயற்றிய பாடலை முதியோன் ஆன நான் எனக்குத் தெரிந்தவரை
பாடியிருக்கிறேன். அடாணா ராகத்தில் பாடினால் நன்றாக இருக்கிறது.

தங்கள் அனுமதியை எதிர் நோக்கி யூ ட்யூபில் போடுகிறேன்.

தங்கள் பாடலை எனது வலைப்பதிவில் கேட்கலாம்.

சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

Thilaga. S said...

அன்பிற்க்கும் மதிப்பிற்கும் உரிய SURY Sir அவர்களுக்கு,
தங்கள் இந்த பாடலுக்கு இசை அமைப்பீர்கள் என்று எதிபார்க்கவேயில்லை.. எனக்கு கோல்ட் மெடல் கிடைத்ததுபோல் சந்தோஷமாக இருக்கிறது..
'எங்கு போவாய்' என்ற வரும் இடத்தில் ராகம் மிக மிக அற்புதமாக இருக்கிறது..
பின்னணியில் சேர்த்துள்ள ராமர் படங்களும் அற்புதமாக இருக்கிறது.

உஙளுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை..
ஸ்ரீராமரின் அருள் எத்தனை உயர்வானது.

Thilaga. S said...

மதிப்பு மிக்க SURY Sir,
இந்த பாடலை நான் எழுதவில்லை. 'காற்றினிலே வரும் கீதம்', 'ஸ்ரீ ராமர் புகழ் பாடுவோம்' பக்கங்களில் footer imageல் உள்ள (கோவிந்தா ஹரி..) பாடல்கள் மட்டும்தான் நான் எழுதியது..மற்றவை எல்லாம் உங்களைப்போன்ற கர்நாடக சங்கீதம் அறிந்தவர்களால் எழுதப்பட்டது. சில பாடல் நான் casetteல் கேட்ட்டவற்றையும்.. இங்கு தொகுத்துள்ளேன். சில பாடல் நான் படித்த பள்ளியில் prayer ல் சொல்லித்தந்தது..